Categories
உலக செய்திகள்

அடுத்த மன்னர் ஹரி தான்…. இளம் பிரிட்டன் மக்களின் ஆசை…. முடிவு யார் கையில்….?

பிரிட்டன் இளவரசர் ஹரி தான் அடுத்த மன்னராக வேண்டும் என்று இளம் பிரிட்டன் மக்கள் விரும்புகின்றனர்.

பிரிட்டன் மகாராணி எலிசபெத் ஆட்சி முடிவடையும் போது அடுத்த மன்னராக இளவரசர் ஹரி வரவேண்டுமென இளம் பிரிட்டன் மக்கள் விரும்புவதாக தற்போது எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் Deltapoll வழியாக டெய்லி மிரரில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரிட்டனிலிருந்து 1,590 பேர் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் 24 முதல் 40க்கு வயதுக்குட்பட்டவர்கள் மில்லினியல்ஸ் என்றும் 57 முதல் 75 வயதுக்குட்பட்டவர்கள் பேபி பூமர்ஸ் என்றும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். வாக்கெடுப்பின் முடிவில் 23% மில்லினியர் 5% பேபி பூமர்ஸ் இளவரசர் ஹரியை தேர்வு செய்துள்ளனர்.

இளவரசர் ஹரி தற்போது ஏற்படுத்திய சர்ச்சைகள் இருந்தபோதிலும் 27% பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 47% பேர் இளவரசர் வில்லியம் அரியணை பெறுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆனால் அவரது தந்தை இளவரசர் சார்லஸ்க்கு 27% பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதுகுறித்து முடியாட்சி எதிர்ப்பு குழு தலைமை நிர்வாக அதிகாரி Graham Smith கூறுகையில் மக்களுக்கு பரம்பரை முறையைப் பற்றி கவலை இல்லை என்றும் அவர்கள் தங்களுக்கு பிடித்த நபரை தேர்வு செய்துள்ளனர் எனவும் கூறினார். இந்நிலையில் அடுத்த மன்னர் இளவரசர் சார்லஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |