Categories
மாநில செய்திகள்

அடுத்த மழை வருவதற்குள்…? ஸ்டாலின் போட்ட உத்தரவு…. இனி சென்னையில் நீர் தேங்காது ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏவா.வேலு, சென்னை மாநகராட்சியில் ஒரு முக்கியமான சாலையான  வால்டாக்ஸ் ரோடு. இந்த பெய்யாமழை பெய்தபோது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த பகுதியிலே வந்து பார்வையிட்டார்கள். கிட்டத்தட்ட பார்த்தால் முட்டுக்கால் அளவு தண்ணி போய்க்கொண்டிருந்தது. ஏனென்றால் இந்தத் தண்ணி செல்ல கூடிய அளவிற்கு நிலைமைகள் இல்லை, சீர் செய்யப்படாத ஒரு நிலைமை . அதை அறிந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் அடிப்படையில்,

நானும் நம்முடைய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களும், மத்திய சென்னையின் நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் தயாநிதி மாறன் அவர்களும் ஏற்கனவே ஒருமுறை இது எல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு அதற்கான திட்ட மதிப்பீடு எல்லாம் தயார் செய்துவிட்டு, முதலமைச்சரின் அனுமதி பெற்று டெண்டர் எல்லாம் விடப்பட்டு இருக்கிறது. இந்தப் பகுதியிலேயே கிட்டத்தட்ட எட்டு இடங்களில் கல்வெட்டு சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 4,600 மீட்டர் நீர்வழிப் போக்குகளை சரி செய்யும் பணியிலே நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டு இருக்கிறது. இதை நான் ஆய்வு செய்ததன் அடிப்படையிலே, அதிகாரிகளை அழைத்து பேசியதில் இந்த வருடம் 6-வது மாதத்திற்குள் இந்தப் பணிகள் எல்லாம் சீராக செய்ய முடியும். அப்படி அந்த பணிகள் முடிவுற்றவுடன் முழங்கால் அளவு தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்பில்லை. அதனால் இந்த பணிகளை எல்லாம் விரைந்து செய்வதற்காகத்தான் நாங்கள் இப்பொழுது ஆய்வு செய்ய வந்தோம்,

அதிகாரிகளை கூப்பிட்டு பேசி இருக்கிறேன், பணிகளை விரைந்து செய்யுமாறு சொல்லியிருக்கிறேன். இந்த இடத்தில் கிட்டத்தட்ட 33 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேங்கும் தண்ணிகளை சீராக எடுத்துவிட பம்பிங் ஸ்டேஷன் தேவை, அந்த பம்பிங் ஸ்டேஷன் எந்த இடத்தில் அமைக்கலாம் என்று ஆய்வு மேற்கொண்டு இருக்கிறோம்.

அந்த பம்பிங் ஸ்டேஷன் அமைப்பதற்கு இந்த பகுதியில் மின்சாரத்தின் அளவு மிகக் குறைவாக இருக்கிறது. அதற்கு 1kv மின்சாரம் போட்டால் தான் செய்ய முடிவும். அதுக்கும் இடம் பார்த்துகொண்டு இருக்கிறோம். இவை எல்லாம் அடுத்த மழைக் காலத்திற்குள்  முடிக்க வேண்டும் என்று தான் முதலமைச்சரின் ஆணை.  அதை ஏற்றுத்தான் இந்த பணியில் ஈடுபட்டு இருக்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |