Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுத்த மாதம் மகளின் கல்யாணம்…! ஆட்டோ டிரைவர் வீட்டில்…. சென்னையில் நடந்த அதிர்ச்சி …!!

சென்னை பூந்தமல்லி அடுத்த மாங்காட்டில் பூட்டியிருந்த வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மாங்காடு சாதிக் நகரில் ஆட்டோ ஓட்டுனர் தமீம் மனைவி தாஹிரா பேகம். இவர் தன்னுடைய பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். இவர்கள் அனைவரும் நேற்று வீட்டின் கதவை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

இரவு வேலை முடித்து வந்த தமிம் பீரோவை திறந்து பார்த்த பொழுது அதில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் பணம் கொள்ளை அடிக்கபட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து புகார் அளித்ததின் பெயரில் மாங்காடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் தனது மகளின் திருமணத்திற்காக தமீம் நகை பணம் சேர்த்து வைத்திருந்தது திருடு போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |