பிரிட்டனில் இருப்பவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் வரும் தொற்றுக்கான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவுகள் பல நாடுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கையை இழந்தவர்கள் எப்போது இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர். இதனால் தொற்றில் இருந்து தப்பிக்க உலக நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே ரஷ்யாவில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறியிருக்கும் நிலையில் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் இறுதிக்கட்ட பரிசோதனையில் தடுப்பு மருந்து இருக்கிறது. இந்நிலையில் பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரிக்கும் தடுப்பு மருந்து அடுத்த மாதம் முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து நவம்பர் இரண்டாம் தேதி மருத்துவமனைகளில் விநியோகிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரிட்டனில் இரண்டாவது அலை ஆரம்பித்திருப்பதால் அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளது. இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 44 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.