கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமெரிக்க மருந்து நிறுவனம் மாடர்னா தெரிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏரளமான உயிர்பலிகளை எடுத்துள்ளது. அதனால் அனைத்து நாடுகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனா மேலும் தீவிரம் அடையாமல் தடுப்பதில் 100 சதவிகிதம் வெற்றியளிக்கும் தடுப்பூசியை தயாரித்க உள்ளதாக அமெரிக்க நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த மாதமே அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் ஆய்வு கழக இயக்குனர் அந்தோணி பௌசி தெரிவித்துள்ளார்.இந்த தடுப்பூசி விரைவில் உலகம் முழுவதும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.