’நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்டபோதிலும் இன்னும் வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகள் மட்டும் பாக்கி உள்ளது. இந்நிலையில் ‘வலிமை’ படக்குழுவினர் அடுத்த வாரம் வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக செல்ல உள்ளனர் என்றும் அங்கு ஐந்து நாட்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வலம் வருகின்றன.
ஏற்கனவே ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில், விரைவில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளிவரும் என்ற தகவலால் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.