Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடுத்த மாதம் 17-ஆம் தேதிக்குள் பணிகள் நிறைவு பெறும்…. நடைபெறும் மின்கம்பம் மாற்றுப்பணி…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

நடைபெற்ற மின்கம்பம்   மாற்றும்   பணிகளை  அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் சேதமடைந்த நிலையில் 700 மின் கம்பங்கள் இருந்தது. இதனை மின்வாரியம் கணக்கெடுத்து புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று பழனிசெட்டிபட்டி பகுதியில் புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதனை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ், செயற்பொறியாளர் பிரகலநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது. நமது மாவட்டம் முழுவதும் உள்ள  சேதம் அடைந்த மின்கம்பிகள்   அடுத்த மாதம் 17-ஆம் தேதிக்குள் மாற்றப்படும். இந்நிலையில்  பணிகள் நடைபெறும் இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |