ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி அக்டோபர் மாதத்தில் சில நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி 21 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும் என்று இசர் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அக்டோபர் மாதம் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகைகளில் நிரம்பியிருக்கும். மாநில வாரியான கொண்டாட்டங்கள், மத விடுமுறைகள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்கள் என அனைத்தும் அதில் அடங்கும்.
அதனால் வாடிக்கையாளர்கள் சிரமங்களை தவிர்க்கும் வகையில் முன்னதாக வங்கி சேவைகளை தடையில்லாமல் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 1, 2,3,6, 7, 9, 10, 12, 13, 14, 15,16 , 17, 18, 19, 20, 22, 24, 23, 26, 31 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும்.