Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடுத்த மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்கள்…. கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியலை மக்கள் பார்வையிடலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மற்றும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதனைப்போலவே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 30ஆம் தேதி அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து வாக்கு பதிவு மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். அடுத்த மாதம் 13, 14,27,28ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் வருகின்ற 5ஆம் தேதி வெளியாகும். www.nvsp.in, voters helpline app மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |