பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி சீக்கிய பயங்கரவாதிகளின் காலிஸ்தான் அமைப்பு கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிதிக்கான சீக்கியர்கள் என்னும் அமைப்பினர் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றார்கள். இது தொடர்பாக கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த மதம் 18ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தி உள்ளது. ஆனால் இதனை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது இந்த சூழலை இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் ஆறாம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்த இருப்பதாக நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் இது பற்றி மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பேசும்போது இந்திய எதிர்ப்பு சக்திகளின் வாக்கெடுப்பு என அழைக்கப்படும் இதற்கு எங்களின் எதிர்ப்பு அனைவரும் அறிந்ததே இது கனடா அரசிடம் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை நாங்கள் முன்பே பொதுவில் தெரிவித்துள்ளோம் நாங்கள் இங்கே டெல்லியில் உள்ள கனடா தூதரிடம் கனடாவில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பு பற்றிய எங்களின் கவலைகளை தெரிவித்துள்ளோம். ஆனால் இந்தியா, கனடா மற்றும் பிற இடங்களில் இந்த பிரச்சினைகளை நாங்கள் தொடர்ந்து எடுத்துச் செல்வோம் என தெரிவித்துள்ளார்.