பிரதமர் நரேந்திர மோடி தனது நீண்டகால திட்டத்தில் ஒன்றாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.
இந்தியாவில் மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த பின்னர் தன்னுடைய நீண்ட கால திட்டங்களை ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகிறது. காஷ்மீர் அயோத்தி சிறப்பு அந்தஸ்து திட்டம், ராமர் கோவில், குடியுரிமை திருத்த சட்டம் என்று ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகின்றது. அந்த வரிசையில் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பாஜக முன்மொழிந்திருந்தது.
இதற்காக அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. இதற்கு பல்வேறு மாநில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடியும் ஒரே நாடு ஒரே தேர்தல் குரல் கொடுத்துள்ளார். அதன்படி சட்டமன்றம் முதல் நாடாளுமன்றம் வரை அனைத்து தேர்தலும் ஒரே சமயத்தில் நடத்தப்பட வேண்டும்.
ஏனெனில் ஒரு வருடத்தில் பெரும்பாலான நாட்கள் தேர்தலுக்கு செலவாகிறது. எனவே இத்தகைய திட்டத்தை கொண்டு வருவது அவசியம் என்று பேசியுள்ளார். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் தற்போது வெறும் பேச்சுக்காக மட்டுமல்ல, அவசியமும் கூட என்று கூறியுள்ளார். ஆனால் இந்த திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் இத்திட்டம் பற்றி முறையாக ஆலோசிக்கப்படுமா? அல்லது மற்ற சட்டங்களை போல இதுவும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி வெற்றி பெறுமா? என்பாத்து பலருக்கும் கவலையாக இருக்கிறது.