தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தற்போது பல திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இந்நிலையில் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நீங்கலாமே என்ற கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நோ என்று கூறியுள்ளார். தனக்கு அப்படி ஒரு எண்ணமே கிடையாது. கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்து வருகிறேன். ஹீரோக்கள் படங்களும் அப்படி இருந்தால் நிச்சயமாக நடிப்பேன்.நயன்தாராவுக்கு திருமணமாகி விட்டதால் அவரிடத்தை பிடிப்பதற்காக குறிப்பிட்ட கதைகளில் மட்டுமே தான் நடிக்கிறேன் என்று கூறுவது வதந்தி என அவர் தெரிவித்துள்ளார்.