Categories
தேசிய செய்திகள்

அடுத்த வருஷம் முதல் பயணிகள் காரில் இது கட்டாயம்!…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் புதுமாடல் கார்கள் அனைத்திலும் இனிமேல் கட்டாயம் டூயல் ஏர்பேக் கட்டாயம் பொருத்தவேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டு செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்பாக சென்ற ஜூலை 2019 முதல் அனைத்து புது கார்களிலும் டிரைவர் பகுதியில் ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டது. அதே சமயத்தில் இந்த வருடம் ஜனவரி முதல் முன்இருக்கையில் அமர்ந்து இருக்கும் மற்றொரு நபருக்கும் ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், ஏப்ரல் 1, 2021 முதல் அறிமுகம் செய்யப்பட்ட புதுமாடல் கார்கள் அனைத்திலும் டூயல் ஏர்பேக் அதாவது காரை இயக்குபவருக்கும், முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் மற்றொரு நபருக்கும் கட்டாயம் ஏர்பேக் பாதுகாப்பை அளிக்கவேண்டும் என அறிவித்து இருந்தது. இதையடுத்து 8 பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய பெரியரக கார்களில், 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்க அரசு திட்டமிட்டு இருந்தது.

8 பேர் வரை போகும் மோட்டார் வாகனங்களில் பயணம் மோற்கொள்பவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் அடிப்படையில், குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்குவதற்கான வரைவு பொது சட்டவிதிகள் அறிவிப்பிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியிருப்பதாவது, “மோட்டார் வாகனங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பு முதன்மையான முன்னுரிமை ஆகும்.

இதனை கருதி 2023ம் வருடம் அக்டோபர் முதல் எம்-1 ரக பயணிகள் கார்களில் குறைந்தது 6 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருப்பது கட்டாயம் என எடுக்கப்பட்ட முன் மொழிவை செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார். இந்த கட்டாயவிதி உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் இந்தியாவில் சிறிய என்ட்ரி லெவல் சிறிய காரின் விலையில் 10 சதவீதம் வரை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |