பிரபல நடிகரும் சிரஞ்சீவியின் மகள் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரையுலகில் நடிகை சமந்தா மற்றும் நாகார்ஜுனாவின் விவாகரத்தை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களின் விவாகரத்து சர்வசாதாரணமாக அரங்கேறி வருகிறது. இசையமைப்பாளர் இமான் தனது மனைவியை பிரிய போவதாக அறிவித்தார். தொடர்ந்து ரஜினி மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுசை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார். இப்போது பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தன்னுடைய கணவரை பிரிய போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீஜா கடந்த 2016.ஆம் ஆண்டு கல்யாணம் என்ற நடிகரை மணமுடித்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய போவதாக சில தகவல்கள் பரவி வருகின்றன. முதன்முதலில் நடிகை சமந்தா நாகார்ஜூனாவை பிரியும் முன்னர் தன்னுடைய இணையதள பக்கங்களில் இருந்து நாகார்ஜுனாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை நீக்கினார். இதே பாணியில் தற்போது ஸ்ரீஜாவும் தன்னுடைய இணையதள பக்கங்களில் இருந்து கல்யாண் என்ற பெயரை நீக்கியுள்ளார். இதை வைத்து தான் தற்போது இருவரும் பிரிய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இருவரும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.