Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஸ்டேஷன் எப்ப வரும்…? அந்த கவலைய விடுங்க…. வாட்ஸ் அப் மட்டும் போதும்…. இதோ தெரிஞ்சுக்கோங்க….!!!!

ரயில் பற்றிய உண்மை விவரங்களை  வாட்ஸ் அப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தினம்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்போது அவர்கள் அடுத்து  வருவது எந்த ஸ்டேஷன்? எப்போது தான் இறங்க வேண்டும் போன்றவற்றை தெரிந்து கொள்வதற்காக தங்களது போனில்  சில  செயலினை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் ரயில் பற்றிய அனைத்து விவரங்களையும் பெறுகின்றனர். இந்த நிலையில் மும்பையை சேர்ந்த railofy என்ற ஸ்டார்அப் நிறுவனம் தங்களது  போனில்    செயலி எதையும் பதிவிறக்கம் செய்யாமலேயே தாங்கள் செல்லும் ரயில் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதற்காக நிறுவனம் பிரத்தியேக வாட்ஸ் ஆப் சாட்பாட்டை உருவாக்கியுள்ளனர்.

இதற்கு முதலில் பயணிகள் தங்களது போனில் நிறுவனத்தின்  91+ -9881193322 என்ற எண்ணை சேமித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த எண்ணிற்கு வாட்ஸ் ஆப் சாட்பாட்டில்    ரயிலில்  என்னை பதிவிட வேண்டும். அதன் பின்னர் பயணிகளுக்கு ரயில் குறித்த முழு விவரமும் கிடைக்கும். மேலும் இதில் ரயிலின் உண்மையான விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |