Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்த 10 ஆண்டிற்கு….. CSK வின் BOSS இவர் தான்…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!

அடுத்த பத்து ஆண்டிற்கு சிஎஸ்கே அணியில் பாஸாக தோனி இருப்பார் என அவ்வணியின் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாம் யாரும் மறக்க முடியாத ஒரு தினம். காரணம் என்னவெனில், நேற்றைய தினம் தான் உலக கோப்பையில் தோனி தனது கடைசி ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருந்தார். அதுவே ஒரு புறம் ரசிகர்களுக்கு வேதனையாக இருந்தது. அதோடு சேர்த்து அவரது ரன் அவுட் சம்பவம் தோனி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களையும் ஒரு நிமிடம் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.  ஆனால் பாழாய்ப்போன கொரோனா நோயால் ஐபிஎல் போட்டி இந்த வருடம் தடைபட்டு டோனியின் ஆட்டத்தை பார்க்க முடியாமல் போனது. சரி அடுத்த வருடமாவது ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவதை பார்க்கலாமா? என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் இருந்தனர். தற்போது இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை செயலர் காசிவிஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், அடுத்த வருடம் நிலைமையை பொறுத்து சிஎஸ்கே அணியில் தோனி விளையாடுவாரா, மாட்டாரா என்பது அறிவிக்கப்படும். ஆனால் கண்டிப்பாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிஎஸ்கே அணியின் பாஸாக தோனி கட்டாயம் இருப்பார். அவருக்கும் அணிக்கும் இடையேயான பந்தம் அப்படிப்பட்டது. அடுத்த தலைமுறைக்கு அணிக்குள் எப்படிப்பட்ட வீரர்களை கொண்டு வர வேண்டும். அவர்களை எப்படி வழி நடத்த வேண்டும் என சொல்லி தர வேண்டிய கடமையும் அவருக்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |