தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் அஜித். இவரின் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு எச்.வினோத், அஜித் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் அடுத்த 18 மாதங்களுக்கு எந்தஒரு படத்திலும் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
தன்னுடைய பைக் ரைடில் அஜித் முழு கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணிவு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ‘AK 62’ திரைப்படம் வெளியாக இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.