Categories
தேசிய செய்திகள்

அடுத்த 2 ஆண்டுகள் ஐடி நிறுவனங்களில் இப்படித்தான்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகே டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய ஐடி நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை எட்ட ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக இந்த 2 ஆண்டுகளுமே ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பணி உயர்வு முதலான சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது சர்வதேச சந்தையில் பொருளாதாரம் மந்தநிலைக்கு செல்ல தொடங்கிவிட்டதால், இந்தியா முழுதும் உள்ள ஐ.டி நிறுவனங்களுக்கான டிமாண்டு குறைய துவங்கிவிட்டது.

அத்துடன் இந்தியாவின் மிகபெரிய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனம் தங்கள் மொத்த வருவாயில் 80-90 சதவீத அமெரிக்க மற்றும் ஐரோப்பியச் சந்தைகளைதான் நம்பி இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்திய ஐடி நிறுவனங்கள் மந்தமான மற்றும் அதிகப்படியான மாற்றத்தை எதிர் கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெரிய அளவிலான வர்த்தக மற்றும் வருவாய் பாதிப்புகளையும் சமாளிக்க வேண்டி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நடுவிலும் அமெரிக்காவின் பொருளாதாரத்தின் மந்த நிலையால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை காட்டிலும் லாபம் தான் அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2022 ஆம் நிதியாண்டில் மட்டுமே இந்திய ஐடி நிறுவனங்கள் 19 % வளர்ச்சியை பதிவுசெய்துள்ளன. அதேபோன்று அடுத்த 2 ஆண்டுகளும் மிகப்பெரிய வளர்ச்சி இன்றி ஓரளவுக்கு மிதமான வளர்ச்சி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |