தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது தொடர் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.