தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் நேற்று சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் போல தேங்கி காட்சியளிக்கிறது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.