வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என கூறியுள்ளது. அதன்படி அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவள்ளூர், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, கரூர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.