Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்தில்…. இந்த 11 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை…!!

தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் 2 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது.. தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக பட்சமாக திருச்செந்தூர், காயல்பட்டணம், ஆறுமுகநேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக மழை பதிவாகியுள்ளது.. இவ்வாறாக தமிழகம் முழுவதும் மழை நீடித்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு  11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல், கரூர், குமரி ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல கடலூர், திருநெல்வேலி, தென்காசி, திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் போன்ற மாவட்டங்களில் மிதமான மழை அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |