தமிழகத்தில் சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிகமாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் குளிர்ச்சியூட்டும் விதமாக கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.