தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனையடுத்து இந்த மாத ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறைய தொடங்கியுள்ளது .
இந்த நிலையில் அடுத்த 2-3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை, தென்காசி, கடலூர், விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் அடுத்த 2 – 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.