Categories
தேசிய செய்திகள்

அடுத்த 20 ஆண்டுகளில்…. நாடு பெரும் வளர்ச்சி அடையும்…. முகேஷ் அம்பானி கருத்து …!!!

அடுத்த 20 ஆண்டுகளில் 30 புதிய எரிசக்தி தொழில் நுட்ப நிறுவனங்கள் நாட்டிற்கு வர இருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 30 புதிய எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நாடு மிகப் பெரிய ஏற்றுமதி நாடாக விளங்கும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். ஆசிய பொருளாதார உரையாடல் 2022-ல் பேசிய அவர், இந்தியாவில் சுத்தமான மற்றும் பசுமை எரிசக்தி துறை அடுத்த 20 ஆண்டுகளில் அரை பில்லியன் டாலர்களை உற்பத்தி செய்யும் அளவு திறனை கொண்டுள்ளது. மேலும் கடந்த 20 ஆண்டுகளில் ஐ.டி வல்லரசு நாடாக இந்தியா வளர்ந்து வருவதையும் நாம் காண்கிறோம். அடுத்த 20 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தின் ஆற்றல் மற்றும் உயிரியலின் நமது வளர்ச்சியை வல்லரசாக்க  உழைப்போம் என நான் நம்புகிறேன்.

தொழில்முனைவோர் மனப்பான்மை அரசாங்கத்தின் வலுவான ஆதரவு மற்றும் நல்ல நிதி இருப்பு ஆகிய மூன்று முக்கிய காரணிகளால் இயக்கப்படும். பசுமை எரிசக்தி காண ஏற்றுமதி மையமாக இந்தியா உருவாகும் வழக்கமான எரி பொருளுக்குப் பதிலாக புதிய உதிரிப் பொருட்கள் வருவதால் ஆற்றலின் மாற்றம் 21 ம்  நூற்றாண்டின் புவிசார் அரசியல் மாற்றத்தை தீர்மானிக்கும் இந்தியா பசுமை மற்றும் தூய்மையான எரிசக்தியை தன்னிறைவு பெறுவது மட்டுமல்லாமல் ஒரு பெரிய ஏற்றுமதியாளராக மாறும் போது இந்தியா உலக வல்லரசாக உருமாற உதவும் என அம்பானி கூறியுள்ளார்.

Categories

Tech |