வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதைப்பற்றி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அதி கனமழை: ராணிப்பேட்டை, திருவள்ளூர்
கன முதல் மிக கனமழை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி
கனமழை: திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.