Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும்….. 16 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!!

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னையில் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் தென்மேற்கு திசையில் உருவாகி இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது அடுத்து வரக்கூடிய அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும், 48 மணி நேரத்திற்குள் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகம் – புதுச்சேரி கடற்கரையை  நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதன் காரணமாக அடுத்து வரக்கூடிய 5 தினங்களுக்கு தமிழகத்தில் பரவலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நாளையும், நாளை மறு தினமும் குறைந்த காற்றழுத்ததாழ்வு பகுதி என்பது தமிழக கடற்கரையை  நோக்கி நகர்ந்து வரக்கூடும் என்பதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..

மேலும் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |