தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், குளிர்ச்சி தரும் விதமாக வெப்பச்சலனம் காரணமாக சில நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வால் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, குமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக் கடலில் ஜூன் 13 முதல் 15 வரை கேரளா, கர்நாடக கரை, லட்சத்தீவு பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Categories