Categories
தேசிய செய்திகள்

அடுத்த 25 வருடங்களில் நம்பர் ஒன் ஆகப்போகும் இந்தியா….. நிர்மலா சீதாராமன்…..!!!!!!!!

அசாம் மாநிலம் தலைநகரான கவுகாத்தியில் தொழில் அதிபர்களுடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியபோது “சென்ற வருட பட்ஜெட்டை போன்றே இந்த வருட பட்ஜெட்டும் மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதனிடையில் உள் கட்டமைப்பு திட்டமிடல், முதலீடு ஆகியவற்றுக்கு பிரதமரின் கதிசக்தி திட்டம் வழிகாட்டும். இதில் உள்கட்டமைப்பு துறையில் பெரியளவில் முதலீடு செய்வது, பொருளாதாரம் மீண்டு வருவதற்கு எப்போதும் அவசியம் ஆகும். அதே நேரம் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அடுத்த 25 வருடங்களில் இந்தியாவை முன்னணி நாடாக உயர்த்துவதற்கு பாடுபட்டு வருகிறோம்.
இதனால் அவற்றிற்கு மின்னணு ரீதியாக இந்தியா தயாராகி வருகிறது. அத வகையில் நாட்டில் மின்னணு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 டிஜிட்டல் வங்கிகள் அமைக்கப்படும். மேலும்  ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் பணம் வெளியிட இருக்கிறது. உங்கள் பாஸ்போர்ட்டில் “சிப்” பொருத்தப்பட்டு இ-பாஸ்போர்ட்டாக வழங்கப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியா இயற்கை விவசாயத்தை நோக்கி நடைபோட்டு வருகிறது. அதே சமயம் டிரோன்களின் உதவியுடன் எரு, உரம் தெளிக்கப்பட இருக்கிறது. அத்துடன் வேளாண் நிலங்களை அளவிடுதல், பயிர்களின் அடர்த்தியை கணக்கிடுதல் மற்றும் விளைச்சலை சிறப்பாக மதிப்பிடுதல் ஆகியவற்றிற்கு டிரோன்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன” என்று அவர் பேசினார்.

Categories

Tech |