தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாதம் மட்டும் அல்லாமல் அடுத்த மாதமும் தொடர்ந்து மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், நாமக்கல், கடலூர், நாகை, சேலம், தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.