தமிழகத்தில் வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிகமாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் குளிர்ச்சியூட்டும் விதமாக கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர், வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதையடுத்து சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலைஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.