தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில்இன்று(5.12.22) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம் மற்றும் புதுவை அருகே 8ம் தேதி நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுகை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கருர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.