தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கி மக்களை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னையில் மார்ச் மாதம் பகல்நேர வெப்பநிலையானது சராசரியாக 32.9 டிகிரி ஆகும். ஆனால் இந்த வருடம் மார்ச் 22 அதிகமான வெப்பநிலை கொண்ட நாளாக பதிவாகியுள்ளது. அதேபோன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாகி இருக்கிறது.
இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.