தமிழகத்தில் சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயி மாதம் தொடங்கும் நிலையில் இப்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் விதமாக தென் தமிழகத்தின் சில பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.
இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தென் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.