தமிழகத்தில் கடந்த 29ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனை தொடர்ந்து சில நாட்களாகவே மழை பெய்யாமல் குளிர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நேற்று முதல் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக விருதுநகர் மற்றும் தேனி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு லேசான முதல் மிதமான மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.