வட இந்திய மாநிலங்களில் கடும் குளிருடன் பனிக்காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட இந்திய மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கடும் குளிருடன் பனிக்காற்று வீசும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குல்மார்க் பகுதியில் பகலில் வெப்பநிலை 50.30 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு குறைவாக இருக்கும். டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக பனி பொழிவு இருக்கும் என எச்சரித்துள்ளது.
அதனால் பொதுமக்கள் அனைவரும் கடும் குளிரை சமாளிக்க சில முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.