தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஜூன் 18,19,20-ல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசியில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூடத்துடன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.