ஜனவரியில் நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா அலை ஏற்பட்டாலும் பாதிப்பின் கடுமை குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவின் BF7 பரவல் வேகமெடுத்த நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர்களில் 39 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது BF7 வகையா என்பது கண்டறியவில்லை.
இந்நிலையில், அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு மிக முக்கியமான நாட்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், முந்தைய கோவிட் பரவலின்போதும், ஜனவரி நடுவில் தான் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கின. இதனால், மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.