வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்குள் கனமழை பெய்யும் எனவும், சென்னையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
Categories