அடுத்த 48 மணி நேரத்தில் உக்ரைனின் தலைநகரம் ரஷ்யாவின் வசமாகும் என்று அமெரிக்கா கணித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் உக்கிரமான தாக்குதலை ஏற்படுத்தி வரும் நிலையில், தலைநகர் கீவையும் சுற்றி வளைத்து தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அடுத்த 48 மணி நேரத்துக்குள் போர் பதற்றமானது, மேலும் அதிகரித்து தலைநகரான கீவ் ரஷ்யா வசமாகும் என்று அமெரிக்கா கணிப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையில் உக்ரைனின் தலைநகரமான கீவ் நகரமானது ரஷ்யப் படைகள் வசமாவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது. மேலும் போர் பதற்றம் அதிகரிக்கும் என அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் திடீர் கணிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.