தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்க கடல், குமரி கடல், மன்னார் வளைகுடா, அந்தமான் கடல், ஆந்திர கடலோரம் ஆகிய இடங்களில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” என்று கூறியுள்ளது.
Categories