அடுத்த 6 மாதத்தில் மீடியாவின் நிலையை பொறுத்திருந்து பாருங்கள் தெரியும்’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அண்மையில் தமிழக பாஜக தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இவர் வரும் 16-ம் தேதி சென்னையில் உள்ள கமலாலயத்தில் தலைவராக பதவியேற்க உள்ளார். இதையொட்டி கோவையில் இருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டுள்ளார்.
அவருக்கு வழிநெடுகிலும் கட்சியினர் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவ்வப்போது கட்சியினர் மத்தியில் பேசுவருகிறார். அப்போது ‘மீடியா நம்மை பற்றி பொய்யாக செய்தி போடுகிறார்கள். அடுத்த 6 மாதத்திற்குள் நீங்கள் பார்க்கலாம். அந்த மீடியாவை நாம் கண்ட்ரோல் பண்ணலாம். ஏனெனில் தொடர்ந்து பொய்யான செய்தியை போட முடியாது’ என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.