தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். விவசாயத்திற்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். அதன்படி ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.
மேலும் மாநிலத்தில் விவசாய உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் துரித நடவடிக்கை மூலம் ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.