அடுத்த ஆறு மாதங்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச போட்டிகள் நடைபெற உள்ளது என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு துறை எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்று உலகமே வியந்து பார்க்கும் வகையில் செஸ் ஒலிம்பியார் போட்டி நடைபெற்றது .
அடுத்தது டென்னிஸ் போட்டி இன்று தொடங்கி நடைபெற உள்ளது. அமைச்சர் மெய்யப்பநாதன் அவர் ஒரு ஸ்போர்ட்ஸ்நாதனாக மாறிவிட்டார். தனது துறையை எப்போதும் துடிப்புடன் வைப்பதற்காக செயல்பட்டு வருகிறார். அனைத்து துறைகளும் வளர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். சிலம்பம், கபடி போட்டிகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகின்றது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. பிப்ரவரி மாதம் வரை பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். அரசின் சிறப்பான செயல்பாடுகளால் விளையாட்டு துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.