நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஷ்மீரில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், அடுத்த 64 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களை கண்காணிப்பதற்காக ஏராளமான காவல்துறையினரை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பணிக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் அவசரகால தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் மற்ற அனைத்து தேவையில்லாத இயக்கமும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் தொடர்ந்து பாசிட்டிவ் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அவற்றை கருத்தில் கொண்டு நிர்வாகத்துடன் ஒத்துழைக்குமாறும், மக்கள் வெளியே வருவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதிகாரிகள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.