Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா….! அன்னபூரணியா இது…. புதிய அவதாரம்….. என்ன தெரியுமா?…!!!

ஆன்மீக பயிற்சி வழங்குவதற்கு, அனைவருக்கும் முக்தி வழங்க ஆசிரமம் தொடங்க உள்ளதாக பெண் சாமியார் அன்னபூரணி தெரிவித்துள்ளார். இதற்காக திருவண்ணாமலை மாவட்டம்,  கீழ்பெண்ணாத்தூர் அடுத்த இராஜாதோப்பு பகுதியில் அன்னபூரணி என்ற பெண் சாமியார் ஆசிரமம் கட்ட நிலம் வாங்கி அடிக்கல் நாட்டினார். இந்த விழா இன்று நடைபெற்றது . பின்னர் பொதுமக்களிடம் பேசிய பெண் சாமியார் தான் அனைத்து பொது மக்களுக்கும் ஆன்மிக பயிற்சி வழங்குவதாகவும், ஆன்மீக பயிற்சி வழங்கி அவர்களுக்கு முக்தி அளிப்பதாகவும் கூறினார்.

தமிழகத்தில் பல்வேறு பெருநகரங்களை விடுவித்து திருவண்ணாமலையில் ஆசிரமம் தொடங்க காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியதற்கு தன்னால் அதிக பணம் செலவழிக்க முடியாது. குறைந்த அளவில் பணம் செலவழித்து இந்த இடத்தை வாங்கி பொதுமக்களுக்காக ஆன்மீகம் மற்றும் அதனை சார்ந்த விஷயங்களை போதித்து முக்தி அளிப்பதற்காக இதை ஆரம்பித்ததாக தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அன்னபூரணி அரசு என்ற பெண் சாமியார் பல்வேறு சம்பவங்களில் சிக்கி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது புதிதாக திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |