கடந்த மார்ச் 1, 2020 நிலவரப்படி மத்திய அரசுத் துறைகளில் 8.72 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதாக ராஜ்யசபாவில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலின்படி, மார்ச் 1, 2019 நிலவரப்படி 9,10,153 காலியிடங்களும், மார்ச் 1, 2018 நிலவரப்படி 6,83,823 இடங்களும் இருக்கின்றன.
கடந்த 2018-19 மற்றும் 2020-21 ஆம் வருடங்களில் பணியாளர் தேர்வாணையம் (SSC), யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) மற்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRB) போன்ற மூன்று பெரிய ஆட்சேர்ப்பு ஏஜென்சிகள் 2,65,468 ஆட்சேர்ப்புகளை மேற்கொண்டுள்ளன.