13 வயதில் தனது ஒரு கையை இழந்த அமெரிக்க வீராங்கனை ஒருவர் அலைகளுக்கு மத்தியில் சீறிப்பாய்ந்து அத்தொடரில் 16 பேர் போட்டியிடும் சுற்றுக்கு தேர்வாகியுள்ளார்.
அமெரிக்க வீராங்கனையான பெத்தானி தனது 13 ஆவது அகவையில் சுறாமீன் கடித்ததால் ஒரு கையை இழந்துள்ளார். இருப்பினும் மனம் தளராது தொடர்ந்து பயிற்சி எடுத்து பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் 3 குழந்தைகளுக்கு தாயான பெத்தானி அலைகளுக்கு மத்தியில் சீறிப்பாய்ந்து உலக அலைச்சறுக்கு லீக் தொடரில் 16 பேர் போட்டியிடும் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவருடைய இந்த வெற்றியை உள்ளூர்வாசிகள் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.