செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், இதுவரை ஆவின் வரலாற்றில் இல்லாத அளவில் தீபாவளிக்கு விற்பனையாகியுள்ளது. அதாவது இதுவரை ஆவின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு ரூ.83 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 300 டன் அதிகமாக நெய் விற்பனையாகி உள்ளது. இனிப்பு வகைகளை பொறுத்தவரையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 400 டன் விற்பனையாகியுள்ளது.
கடந்த வருடம் தீபாவளிக்கு 55 கோடியாக இருந்த ஆவின் விற்பனை, இந்த ஆண்டு 83 கோடிக்கு விற்பனையாகிள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை 330 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அரசு துறைகளை சார்ந்த அனைவரும் ஆவின் இனிப்புகளை வாங்கி உள்ளனர். 7.60 லட்சம் வீடுகளுக்கு தினமும் ஆவின் பால் செல்வதால், பால் கவர்களில் ஆவின் இனிப்புகள் விளம்பரம் செய்யப்பட்டதால், ஆவின் பொருட்கள் ஒரே நேரத்தில் 27,60,000 பேருக்கும் நேரடியாக விளம்பரம் சென்றடைந்துள்ளது என்று கூறியுள்ளார்.