Categories
அரசியல் தேசிய செய்திகள்

அடேங்கப்பா… இது லிஸ்ட்லயே இல்லையே… புதிய பரபரப்பு…!!!

பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதிலும் சில கட்சிகள் தொகுதி பங்கீடு பற்றிய தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் மாநிலம் முழுவதிலும் தீவிர கண்காணிப்பு பணி நடந்துவருகின்றது.

இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தலைமையின் கீழ் நாட்டின் ஜனநாயகம் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் பலவீனம் அடைந்துள்ளன என்றார். இவர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நிதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |